Homeபிற செய்திகள்22-ம் தேதி அறிமுகமாகிறது ஐக்யூஓஓ இசட் 6 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்

22-ம் தேதி அறிமுகமாகிறது ஐக்யூஓஓ இசட் 6 5ஜி மாடல் ஸ்மார்ட்போன்

நவீன தொழில்நுட்பத்தில் வெளிவந்துள்ள ஐக்யூஓஓ இசட் 65ஜி ஸ்மார்ட்போன் இளம் தலைமுறையின ருக்கு ஏற்ப முன்னணி தொழில்நுட்ப அம்சங்களுடன் சிறந்த கேமிங் அனுப வத்தை வழங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்நாப்டிராகன் 695 5ஜி மொபைல் இயங்குதளத்தில் செயல்படுகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் முழு எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. 8ஜிபி ரேம் உடன் வெளிவரும் இதில், மேலும் 4ஜிபி ரேம் பொருத்தும் வசதி உள்ளது.

இதில் உள்ள பிரத்யேக 5 அடுக்கு லிக்விடு கூலிங் சிஸ்டம், ஸ்மார்ட் போனை சூடாகாமல் பாதுகாக்கிறது.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் இதன் விலை ரூ.15,499. ஆனால் அறிமுக சலுகையாக ரூ. 13,999-க்கு கிடைக்கிறது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் இதன் விலை ரூ.16,999. ஆனால் அறிமுக சலுகையாக ரூ. 14,999-க்கு கிடைக்கிறது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டுடன் இதன் விலை ரூ.17,999. ஆனால் இது 15,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. டைனமோ பிளாக், குரோமடிக் ப்ளூ ஆகிய இரண்டு வண்ணங்களில் அமேசான். இன் மற்றும் ஐக்யூஓஓ இ-ஸ்டோரில் வரும் 22-ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிபுன் மரியா கூறியதாவது:

15 ஆயிரம் ரூபாய் பிரிவில் அதிவேக திறன் கொண்ட 5ஜி மாடலை அறிமுகம் செய்துள்ள நாங்கள் நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்குவோம். 15 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சிறந்த செயல்திறன்மிக்க ஸ்மார்ட் போனை வழங்க வேண்டும் என்பதற்காக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கார்டு கொண்ட ஸ்மார்ட்போனை சலுகை விலையில் 14,999 ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img