அண்ணாமலைப் பல்கலைக்கழக அம்பேத்கர் இருக்கை மற்றும் கணினி பொறியியல் துறை
சார்பில் இணையத்தள வடிவமைப்பு என்ற தலைப்பில் 2 நாள் பயிலரங்கம்
ஆக.8 மற்றும் 9 ந்தேதி பொறியியல் புலத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கணினி பொறியியல் துறைத் தலைவர்
ரா.பவானி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியை பொறியியல்
புல முதன்மையர் பேரா.சி. கார்த்திகேயன் தலைமையுரையாற்றினார்.
அவர் தனது உரையில் இணையத் தள வடிவமைப்பின் முக்கியத்துவம் குறித்து
மாணவர்களிடையே எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியை பல்கலைக்கழக ஆட்சிக்குழு
உறுப்பினர் மற்றும் இந்திய மொழிப்புல முதன்மையர் பேரா. அரங்க பாரி
துவக்கி வைத்து துவக்கவுரையாற்றினார்.
அவர் தனது உரையில் நவீனகால
உலகில் இணையத்தள வடிவமைத்தல் தேவைக்குறித்தும், மாணவர்கள் முழுமையாக இந்த
பயிலரங்கத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.இந்த பயிலரங்கத்தின் 2 நாள் வகுப்புகளையும் ம.சங்கீதா சிறப்பாக கையாண்டார்.இந்நிகழ்ச்சியில் அம்பேத்கர் இருக்கையின்
உதவி பேராசிரியர் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான வீ.ராதிகாராணி நன்றியுரையாற்றினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை மற்ற ஒருங்கிணைப்பாளர்களான அம்பேத்கர் இருக்கையின் பேராசிரியர் க.சௌந்தரராஜன்,கணினி பொறியியல் துறை இணை பேராசிரியர்.
முனைவர். அ புனிதா, உதவி பேராசிரியர்கள் ச.சத்தியா,கே.தி.மீனா அபர்ணா
ஆகியோர் செய்திருந்தனர். இப்பயிலரங்கத்தில் தமிழ்நாட்டில் பல்வேறு
கல்லூரிகளிருந்து 200க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு
பயனடைந்தனர்.