Homeபிற செய்திகள்2ம் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது முத்தரையர் சதய விழா- எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்

2ம் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது முத்தரையர் சதய விழா- எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே பேரரசர் சுவரன் மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது முத்தரையர் சதய விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அவரது திருஉருவப் படத் திற்கு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி மேயர் ந.தினேஷ் குமார், திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் எம்.கே.எம் பாலசுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு. நாகராசன் கலந்துகொண்டு பேரரசர் சுவரன் மாறன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அனைவரும் ஹார்வி குமாரசாமி திரு மண மண்டபத்தில் ஏற் பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் கூட்டத்தில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம், முசிறி சட்டமன்ற உறுப் பினர் காடுவெட்டி ந.தியாக ராஜன், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம்.அ.ஆண்டி அம்பலம், நத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.பழனி யாண்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேரரசர் சுவரன் மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையரின் வரலாற்றினையும் மற் றும் அவர் ஆற்றிய பணிகளையும் பற்றி பொதுமக்களுக்கு எடுத்து ரைத்தனர்.விழாக்குழு ஒருங்கி ணைப்பாளர் தர்மராஜ் மற்றும் அருண் மொழி வர்மன் நிகழ்ச்சியை ஒரு ங்கிணைத்தார்

படிக்க வேண்டும்

spot_img