fbpx
Homeபிற செய்திகள்1251 அங்கன்வாடி மையங்களில் முருங்கை நடவு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தகவல்

1251 அங்கன்வாடி மையங்களில் முருங்கை நடவு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தகவல்

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி நந்தனார்புரம் அங்கன்வாடி மையத்தில் முருங்கை கன்று மற்றும் கருவேப்பிலை செடி நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் கலெக்டர் விசாகன் மரக்கன்றுகளை நடவு செய்தார். கூடுதல் ஆட்சியர்கள் தினேஷ்கு மார், சரவணக்குமார், பாலசந்தர் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் இது குறித்து கலெக்டர் தெரிவித்ததா வது:அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந் தைகளுக்கு இரும்புச்சத்து மற்றும் ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் உள்ள 1251 அங்கன்வாடி மையங் களில் தலா இரண்டு நாட்டு முருங்கை கன் றுகள் மற்றும் ஒரு கருவேப்பிலை கன்றும் நடவு செய்யப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைக ளுக்கும், அங்கன் வாடியில் உள்ள அனைத்து குழந் தைகளுக்கும் தின மும் முருங்கை ரசம் வழங்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து அ ங்கன்வாடி மையங்களிலும் முருங்கை மற்றும் கரு வேப்பிலை கன்றுகள் நடப்பட்டுள்ளன.

ஊரக வளர்ச்சித்துறை மூலமாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் அதிக அளவு முருங்கை வளர்க்கும் நோக்கில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 52 முருங்கை நாற்றுப் பண்ணைகள் அமைக்கப் பட்டு தற்போது, சுமார் 31200 எண்ணிக்கையிலான முருங்கைக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனைத்து கிராமங் களில் உள்ள அரசு புறம் போக்கு நிலங்களிலும் முருங்கை வளர்ப்பு பணி கள் பெருமளவு மேற் கொள்ளப்ப டவுள்ளது. வளர்க்கப்படும் முருங் கைகளை பொது மக்க ளுக்கு வழங்கவும் திட்டமி டப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலர வன், கிருஷ்ணன், செட்டிநா யக்கன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img