fbpx
Homeபிற செய்திகள்12-வது ஆண்டு விழாவை தேசிய மெக்கானிக் தினமாக கொண்டாடுகிறது ஜிஎஸ் கால்டெக்ஸ் இந்தியா நிறுவனம்

12-வது ஆண்டு விழாவை தேசிய மெக்கானிக் தினமாக கொண்டாடுகிறது ஜிஎஸ் கால்டெக்ஸ் இந்தியா நிறுவனம்

வாகன என்ஜின்களுக்கான மசகு எண்ணை தயாரிக்கும் (லூப்ரிகண்ட்) இந்தியாவில் உள்ள சிறந்த முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜிஎஸ் கால்டெக்ஸ் இந்தியா நிறுவனம், 12-வது ஆண்டு விழாவை கொண்டாடும் இத்தருணத்தில், மெக்கானிக்குகளை கவுர விக்கும் விதமாக இந்த நாளை தேசிய மெக்கானிக் தினமாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் இந்நிறுவனம் 12 ஆண்டுகளுக்கு முன்னர் பிப்ரவரி 2-ம் தேதி துவக்கப்பட்டது. இந்நிறுவனம் மெக்கானிக் தினத்தை கொண்டாடும் விதமாக, அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் ஒரு புதிய பிரச்சார விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

இது ஒரு மெக்கானிக்கின் உணர்ச்சிகள் மற்றும் அவர்கள் எந்திரத்துடன் பேசுவது போல் ஒரு ஆட்டோ மொபைலைப் பற்றிய அவர்களின் புரிதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

மெக்கானிக்களுக்கு “வாகனடாக்டர்கள்”என்றபட்டத்தையும்வழங்கிகவுரவிக்கிறது. தொற்று நோயால் உலகமே ஸ்தம்பித்து நின்றபோது, ​​வாகன செயல்பாடுகள் மட்டும் இருந்து கொண்டிருந்தன.

ஒரு வாகனம் நின்றால் என்ன நடக்கும்? அதற்கான பதில் நாம் மெக்கானிக்குகளை அழைக்க வேண்டும் என்பதாகும். அவர்கள் எப்போதும் நமக்காக இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் அனைத்து பணிகளையும் பாராட்டுவதற்கான நேரம் இது என்று ஜிஎஸ் கால்டெக்ஸ் இந்தியா நிறு வனம் எண்ணுகிறது.

புதிய விளம்பர பிரச்சாரம் குறித்து, ஜிஎஸ் கால்டெக்ஸ் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பொது மேலாளர் மதுமோகன் கூறியதாவது:
12 ஆண்டுகளை நிறைவு செய்வது என்பது எந்தவொரு பிராண்டிற்கும் பெருமையான சாதனையாகும்.

ஜிஎஸ் கால்டெக்ஸ் அந்த மைல்கல்லை எட்டியுள்ளதால், அதை பிரமாண்டமாக கொண்டாடி, நம்மை நாமாக மாற்றும் மெக்கானிக் சமூகத்திற்கு அதை திரும்ப கொடுக்க விரும்பினோம்.

அவர்களின் பணியை கொண்டாடும் விதமாக, அவர்க ளுக்காக ஒரு நாளை அர்ப்பணிக்க முடிவு செய்தோம்.

அதனைத் தொடர்ந்து, எங்கள் நிறுவன துவக்க தினத்தை மெக்கானிக் தினமாக கொண்டாடுகிறோம். அவர்களை கவுரவிப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img