Homeபிற செய்திகள்12 புதிய தயாரிப்புகள் ஹிண்டுவேர் அறிமுகம்

12 புதிய தயாரிப்புகள் ஹிண்டுவேர் அறிமுகம்

கழிப்பறை மற்றும் குளியலறை சாதனங்கள் துறையில் முதன்மை வகிக்கும் ஹிண்டுவேர், 12 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்திருப்பதன் வழியாக அதன் புராடக்ட் தொகுப்பு விரிவாக்கம் செய்யப்படுவதை அறிவித்திருக்கிறது.

தூய்மை மற்றும் புத்துணர்ச்சிக்கான தானியக்க செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக திகழும் புரட்சிகர தொழில்நுட்பத்தைக் கொண்ட ‘ஈஸி க்ளீன்’என்ற பெயரில் கவுன்ட்டர்டாப் பேசின்களின் புதிய அணிவரிசையை இந்நிறுவனம் அறிமுகம் செய் திருக்கிறது.

புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் ஹிண்டுவேர் இத்தாலியன் கலெக்‌ஷன் என்ற ஷவர் என்குளோஷர் அறிமுகத்தின் மூலம் பாத் வேர் பிரிவில் ஒரு புதிய வகையினத்தில் தனது நுழைவையும் இந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.

பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் உள்ள நுகர்வோர்களை குறிவைக்கும் இவ்விரிவாக்கம், வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்துகிற ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட தீர்வை வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது.

ஹிண்டுவேரின் இந்த புதிய புராடக்ட் தொகுப்பானது, இல்லங்கள், விருந்தோம்பல்துறை அமைவிடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குளியலறை மற்றும் கழிப்பறை சூழல்களுக்கு நேர்த்தியான அழகை வழங்கும்.

ஹிண்டுவேர் லிமிடெட்- ன் பாத் மற்றும் டைல்ஸ் பிசினஸ் பிரிவின் தலைமை செயலாக்க அதிகாரி சுதான்சு போக்ரியால், இந்த புராடக்ட் தொகுப்பின் அறிமுகம் பற்றி கூறியதாவது: நுகர்வோர்களின் மாறுபடுகின்ற வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எமது புராடக்ட்களின் தொகுப்பை நாங்கள் தற்போது விரிவாக்கம் செய்து வருகிறோம் என்றார்.

ஹிண்டுவேர் லிமிடெட்- ன் சந்தையாக்கல் பிரிவின் துணைத் தலைவர் சாரு மல்ஹோத்ரா பாட்டியா பேசுகையில், “வேறுபட்ட பல்வேறு விலைகளில் புதுமையான தயாரிப்புகளை தேடுகின்ற நுகர்வோர்களது தேவைகளை திருப்திகரமாகப் பூர்த்தி செய்யும் மிகப்பிரபலமான பிராண்டாக ஹிண்டுவேர் இருந்து வருகிறது.

இப்புதிய புராடக்ட் அறிமுகத்தின் மூலம் குளியலறை சாதனங்களை மக்கள் பார்க்கும் கண்ணோட்டத்தையே நாங்கள் மறுவரையறை செய்ய விரும்புகிறோம்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img