கும்மிடிப்பூண்டி அருகே பாப்பாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி, வாமதேவ பூர்ணா சலபாசனத்தை, ஒரே நிமிடத்தில் 28 முறை செய்து மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்துள்ளார்.
ராஜன்-சித்ரா தம்பதியின் மகள் ரா.சி.தாரிணி (வயது 11). சிறுபுழல்பேட்டை கிராமத்தில் உள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7-வது வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கும்மிடிப்பூண்டியில் உள்ள ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயிற்சி பெற்று வருகிறார்.
வாமதேவ பூர்ணா சலபாசனம் என்ற கடினமான யோகப் பயிற்சியை ஒரு நிமிடத்தில் 28 முறை தலைகீழாக படுத்தபடி செய்து புதிய உலக சாதனை படைத்தார்.
இவரின் சாதனை, இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்ட்’’,வேர்ல்ட் வைட் புக் ஆஃப் ரெக்கார்ட்’’, “அசிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்டு’’ ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது.
சாதனை படைத்த சிறுமி தாரிணி மற்றும் அவரது யோகா ஆசிரியை சந்தியா ஆகியோரை சக மாணவர்கள் மற்றும் கும்மிடிப்பூண்டி மக்கள் பாராட்டி வருகின்றனர்.



