fbpx
Homeபிற செய்திகள்விஎஸ்டி ஜெட்டாரின் புதிய டிராக்டர்கள் அறிமுகம்

விஎஸ்டி ஜெட்டாரின் புதிய டிராக்டர்கள் அறிமுகம்

பிரபல டிராக்டர் மற்றும் வேளாண் உபகரண தயாரிப்பாளரான விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் மற்றும் ஜெட்டார் டிராக்டர் a.s., சமீபத்தில் நடைபெற்ற சிமிமி அக்ரோ டெக் இந்தியா 2022 கண்காட்சியில், அந்தந்த வகையினத்தில் மிகச்சிறந்த இரு டிராக்டர்களை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த 45HP மற்றும் 50HP திறன் வகையின டிராக்டர்கள் விஎஸ்டி மற்றும் ஜெட்டார் நிறுவனங்களால் அவை இந்தியா மற்றும் செக் குடியரசில் அமைந்துள்ள உற்பத்தி ஆலைகளில் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், செக் குடியரசின் இந்தியா விற்கான தூதர் டாக்டர் எலிஸ்கா ஜிகோவா ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் தலைமை செயல் அலுவலர் ஆண்டனி செருகாரா கூறியதாவது:

புதுயுக விவசாயிகளின் விருப்பங்கள் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய் வதற்கு ஏற்றவாறு அதிக உற்பத்தி திறன், செயல்திறன், சௌகரியம் மற்றும் பயன்படுத்துவதற்கு எளிமை, ஆகியவற்றை வழங்குகின்ற மேம்பட்ட தயாரிப்புகளை உருவாக்குவதற்கு ஜெட்டார் நிறுவனத்துடனான கூட்டாண்மை உதவியிருக்கிறது.

புத்தம் புதிய தொழில்நுட்பங்களை வேகமாகவும், திறம்படவும், நவீன விவசாயிகள் ஏற்று செயல்படுத்தும் நிலையில், விவசாயிகளுக்கு சிறப்பான வருவாயையும், ஆதாயத்தையும் உறுதி செய்ய வகையினத்தில் மிகச்சிறந்த செயல்திறனை வழங் குவதற்கென்றே இந்த விஎஸ்டி ஜெட்டார் டிராக்டர்கள் உருவாக் கப்பட்டிருக்கின்றன என்றார்.

ஜெட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராபர்ட் ஹர்மான், கூறியதாவது: செழுமையான பாரம்பரியம் கொண்ட விஎஸ்டி டில்லர்ஸ் டிராக்டர்ஸ் லிமிடெட் என்ற இந்திய நிறுவனத்துடனான கூட்டாண்மையில், இந்தியச் சந்தையில் மீண்டும் கால்பதிப்பதில் ஜெட்டார் நிறுவனத்திலுள்ள நாங் கள் மகிழ்ச்சியடைகிறோம்.

1960ம் ஆண்டிலிருந்தே இந்தியாவிற்கு டிராக் டர்களை ஏற்றுமதி செய்தவரலாறு எங்களுக்கு இருப்பதால், இந்திய நாட்டுடன் நீண்டகால உறவும், ஒத்துழைப்பும் ஜெட்டார் நிறுவனத் திற்கு இருக்கிறது.

அதன்பிறகு, பல்வேறு மாநிலங்களில் அக்ரோ – இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ்(HMT) நிறுவனத்துடன் செய்து கொண்ட லைசென்ஸிங் ஒப்பந்தத்தின் கீழ், ஜெட்டார் டிராக்டர்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டன / தயாரிக்கப்பட்டன.

1970 மற்றும் 1990 ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் 60,000-க்கும் அதிகமான டிராக்டர்களை தயாரித்து வழங்கியிருக்கிறோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img