fbpx
Homeபிற செய்திகள்‘ஹாஸ்ப்ரோ’ விளையாட்டுகள் இப்போது தமிழில் அறிமுகம்

‘ஹாஸ்ப்ரோ’ விளையாட்டுகள் இப்போது தமிழில் அறிமுகம்

உலகளாவிய முன்னணி விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான, ஹாஸ்ப்ரோ, கிளாஸிக் மோனோபோலி, கேம் ஆஃப் லைஃப், மோனோபோலி டீல் கார்டு கேம் ஆகியவற்றை மாற்று மொழியில் விளையாடும் ரகங்களை அறிமுகம் செய்வதாக தெரிவித்துள்ளது.

2021-ம் ஆண்டின் துவக்கத்தில் மோனோபோலி டீல் கார்டு கேமின் இந்தி பதிப்பை வெளியிட்டு ஒரு வருடம் ஆன பிறகு, ஹாஸ்ப்ரோ நிறுவனத்திற்கு இந்த தமிழ் பதிப்பு மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

ஹாஸ்ப்ரோ இந்தியா நிறுவனத்தின் கமர்ஷியல் டைரக்டர் லலித் பார்மர் தெரிவிக்கையில், “தமிழ் பேசும் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு, இந்த கேம்கள் அவர்களது மொழியில் வருவது நிச்சயம் குடும்ப பொழுதுபோக்கிற்கான ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

அடிப்படைக் கணிதம், தகவல் தொடர்பு மற்றும் வாழ்க்கைக்குத் தேவை யான முக்கிய சிந்தனைத் திறன்கள் ஆகியவற்றை தாய் மொழியில் கற்கும் அற்புதமான வாய்ப்பாக இது இருக்கும் என்பது உறுதி,” என்றார்.

மோனோபோலி டீல் கார்டு கேம் விளையாடும்போது, ஆக்ஷன் கார்டு களாக ‘இல்லை என்று சொல்’, அல்லது ‘இன்று உங்கள் பிறந்தநாள்’ போன்ற தருணங்களையும் தமிழிலேயே கூறி மகிழும் வகையில் உள்ளன.

கேம் ஆஃப் லைஃப்-இல், விளையாடுபவர்கள் வாழ்க்கையின் பல்வேறு சாகசங்களை அனுபவிக்கலாம். ‘விண்வெளி வீரர்’ அல்லது ‘வழக்கறிஞர்’ போன்ற பல்வேறு தொழில்துறை தேர்வுகளை மேற்கொண்டு அவர்களின் வாழ்க்கை பயணத்தை உணரும் சுவாரஸ்யமான தருணங்களை பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கிறது.

வசிப்பிடத் தேர்வுகளாக ‘கனவு பங்களா’ அல்லது ‘பண்ணை வீடு’ போன்றவற்றையும் தேர்ந்தெடுத்து விளை யாடலாம்.ஹாஸ்ப்ரோ நிறுவனத்தின், தெற்கு ஆசிய, பொது மேலாளர், பாவேஷ் சோமயா பேசுகையில், “ரசிகர்களுக்காக அவர்களது தாய் மொழியில் ஒரு விளையாட்டை வழங்குவதை விட வேறு என்ன மதிப்புடைய வழியில் தயாரிப் பினை உருவாக்க முடியும். இதன் மூலம் விளையாட்டு அடிப்படையிலான ஒரு கல்விமுறை உருவாகும் வாய்ப்பும் ஏற்பட் டுள்ளது,” என்றார்.

மோனோபோலி போர்டு கேம் தமிழில். இதன் விலை ரூ. 1,199/-.
மோனோபோலி டீல் கார்டு கேம் தமிழில். இதன் விலை ரூ. 299/-.
கேம் ஆஃப் லைஃப் தமிழில்- இதன் விலை ரூ. 1,599/-.

படிக்க வேண்டும்

spot_img