fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியுடன் லின்ஸ் -லாரன்ஸ் அண்ட் மாயோ நிறுவனம் ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியுடன் லின்ஸ் -லாரன்ஸ் அண்ட் மாயோ நிறுவனம் ஒப்பந்தம்

கோவை வட்ட மலைப் பாளையம் ஸ்ரீராமகிருஷ் ணா பொறியியல் கல்லூரி மற்றும் ஆளில்லா விமான வடிவமைப்பாளரான லின்ஸ் -லாரன்ஸ் அண்ட் மாயோ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் லின்ஸ் – லாரன்ஸ் அண்ட் மாயோ வர்த்தக பிரிவின் இயக்குனர் டாக்டர் விவேக் மென்டோன்சா, எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் இயக்குனர் வி. ராமகிருஷ்ணா ஆகியோர் கையொப்பமிட்டனர்.

கல்லூரி துணை முதல்வர் பி. கருப்பசாமி வரவேற்றார். சிறப்பு விருந் தினராக ஏர் இந்தியா வின் முன்னாள் விமானப்படை மற்றும் முன்னாள் பயிற்சித் தலைவர், கேப்டன் பர்ம் ஜித் அலுவாலியா கலந்து கொண்டார்.

இந்தப் புரிந்துணர்வு கூட்டாண்மை ஒப்பந்தத் தின் மூலம் ட்ரோன் பயிற்சி அகாடமி ஒன்றை கல்லூரி வளாகத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

இதன் மூலம் ஆளில்லா விமான ஆய்வு, கண்காணிப்பு போக்குவரத்து மற்றும் மனிதர்களின் கூட்ட நெரிசல் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ என பல்வேறு ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவர்கள் மற்றும் பேரா சிரியர்கள் கொண்டு சிறப்பு ட்ரோன்களில் திறன்பட பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

விவசாய மேலாண்மை திட்டத்தை பல்வேறு விதமாக மேம்படுத்த கியூ தொடர் யுஏவி, நிஞ்சா யுஏவி, நேத்திர ப்ரோ மற்றும் நேத்ரா வி3, என பலதரப்பட்ட ட்ரோன் களை வடிவமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இதற் கேற்ப, ஏரோநாட்டிக்கல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறைக்கேட்ப வசதியாக கல்லூரி பாடத்திட்டங்கள் அறிமு கப்படுத்தப் பட்டுள்ளன.

லாரன்ஸ் அண்ட் மாயோ நிறுவனமானது உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சி மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகங் களின் பரந்த தரவுத்தளம் அமைத்து, நில அளவைக் கருவி,விவசாயம் மற்றும் வானிலை கண்காணிப்பு உபகரணங்கள், நவீன ட்ரோன்கள், மருத்துவம் மற்றும் சுகாதார கருவிகள் அமைக்க முயற்சி மேற் கொண்டு வருகிறது.

லின்ஸ் – லாரன்ஸ் அண்ட் மாயோவின் தலைமை பறக்கும் பயிற்று விப்பாளர் கேப்டன் ஷெரில் டிகுன்ஹா எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைமை நிர்வாகி சி.வி ராம்குமார், கல்லூரியின் ஏரோ நாட்டிக்கல் துறை தலைவர் டேவிட் ரத்தின ராஜ், கல்லூரியின் இண் டஸ்ட்ரி கனெக்ட் தலைவர் கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img