வேலூர் நறுவீ மருத்துவமனையில் முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத், துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கேக் வெட்டி முதலாம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.
அமெரிக்க நாட்டின் புகழ் பெற்ற ஹென்றி போர்டு மருத்துவமனையின் தொழில்நுட்ப துணையுடன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ம் தேதி வேலூரில் நறுவீ மருத்துவமனை தொடங்கப்பட்டது.
பொது மருத்துவம், இருதய அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், மூட்டு அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலன், மூளை அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை தண்டுவட அறுவை சிகிச்சை, காது. மூக்கு, தொண்டை சிகிச்சை, பல் மருத்துவம் உள்ளிட்ட 25 சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவுகள் வசதியுடன் இம்மருத்துவமனை சிறப்பாக இயங்கி வருகிறது.
மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழா இன்று காலை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத், துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் துறை தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன், அறங்காவலர் சுகுமார், பொது மேலாளர் நிதின் சம்பத் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கேக் வெட்ட, விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் பெரு மளவில் பங்கேற்றனர்.
இம்மருத்துவமனை தொடங்கப்பட்டு ஓராண்டு காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் 35000-க்கும் அதிகமான நோயாளிகள் இம்மருத்துவமனைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
குறிப்பாக, உலகை அச் சுறுத்தி வரும் கொரோனா பெருந் தொற்றால் பாதிக்கப்பட்ட 3000-க்கும் மேற்பட்டவர்கள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். மேலும், 1500-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டுள்ளதாக மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், இம்மருத்துவமனை தொடங் கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருதயம், கல்லீரல், சிறுநீரகம், நுரை யீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்திட தமிழ்நாடு அரசு இம்மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இம்மருத்துவமனையில் ‘ரோசா’ ரோபோ துணையுடன் மூளை அறுவை சிகிச்சை செய்யும் வசதி, வலிப்பு நோய் சிகிச்சை கண்காணிப்பு வசதி அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே, இந்த வசதி உள்ள இரண்டாவது மருத்துவமனை என்ற பெருமையை நறுவீ மருத்துவமனை பெற் றுள்ளதாக மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் தொரிவித்தார்.



