கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூர் குப்பை கிடங்கில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு, மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்டு, குப்பை கிடங்கிற்கு கொண்டுவரப்படும் குப்பைகளை தரம் பிரித்து, முறையாக சேகரிக்க மண்டல சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா, உதவி செயற்பொறியாளர்கள், செந்தில்பாஸ்கர், கருப்பசாமி, மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், ராமு, முருகா, உதவி பொறியாளர்கள் ரவிக்கண்ணன், ராஜேஷ், சதீஷ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.