Homeபிற செய்திகள்வீடு தேடி வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகள்

வீடு தேடி வரும் ஆக்சிஜன் செறிவூட்டிகள்

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையுள்ளவர்களில் ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு எய்டு இந்தியா அமைப்பானது வீடுதேடி வந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்க தயாராக உள்ளது என இதன் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தெரிவித்தார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும், இந்த அமைப்பானது அரசு மருத்துமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறது.

வியாழக்கிழமை கோவை, வைசியாள் வீதியிலுள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் 5லி கொள்ளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகளை மருத்துவ மனையின் மருத்துவர் கிருத்திகாவிடம் சண்முகம் வழங்கினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள பல அரசு மருத்துவமனைகளுக்கு 9 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், உடல் வெப்பத்தை அளவிடும் கருவி, ஆக்சி மீட்டர்கள், படுக்கைகள், முகக்க வசங்கள், கிருமிநாசினிகளை வழங்கியுள்ளோம்.

குறிப்பாக வீட்டில் தனி மைப்படுத்தப்பட்டுவர்களை தேடிச் சென்று உணவு மற்றும் அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் கொடுத்துவருகிறோம்.

முக்கியமாக ஆக்சிஜன் தேவைப்படுவோருக்கு வீட்டிற்கே சென்று ஆக்சிஜனேட்டர்களை கொடுத்து வருகிறோம்.

இதனை அவர்கள் போதுமான அளவிற்கு பயன்படுத்தி விட்டு திருப்பி கொடுத்துவிடலாம்.

இந்த உதவிகள் தேவைப்படுவோர் 7010324045 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். நிகழ்ச்சியின் போது தன்னார்வளர் சிவா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உட னிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img