fbpx
Homeபிற செய்திகள்வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை உரமாக்கும் திட்டம் நெல்லையில் துவக்கம்

வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை உரமாக்கும் திட்டம் நெல்லையில் துவக்கம்

தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாநகராட்சியில் வீடுகளில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பையைக் கொண்டு உரமாக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தனர்.

நெல்லை மாநகர பகு தியில் உள்ள 4 மண் டலங்களில் தினமும் 170 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இதில் 102 டன் குப்பை மக்கும் குப்பை ஆகும்.

இவற்றை மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள நுண் உரமாக்கும் செயலாக்க மையத்தில் உரமாக்கும் பணியை பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

பின்னர் அந்த உரத் தினை பொது மக்களுக்கு ரூ.10/கி என விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திட்டம் மாநகராட்சியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

குப்பையை சேகரிப்பதில் உள்ள சிரமங்களை போக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தியது.

அதன்படி வீடுகளில் கிடைக்கும் மக்கும் குப்பையை வீடு களிலேயே உரமாக்கும் புதிய திட்டம் நேற்று (ஆக.25) துவங்கப்பட்டது.

பாளை மண்டலம் விஎம்சத்திரம் நகரில் உள்ள சுமார் 500 வீடுகள் தேர்வு செய்யப்பட்டு, அதில் 150 வீடுகளில் இந்தத் திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி கமிஷனர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில், பாளை மண்டல உதவி ஆணையாளர் ஜகாங்கிர் பாஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img