Homeபிற செய்திகள்விருதுநகர் பள்ளி மாணவி கின்னஸ் சாதனை முயற்சி

விருதுநகர் பள்ளி மாணவி கின்னஸ் சாதனை முயற்சி

விருநகரில் தனியார் பள்ளி மாணவி ஹர்ச நிவேதா, விருச்சிக ஆசனத்தில் க்யூப்பை 17.01 விநாடிகளில் செய்து முடித்து கின்னஸ் சாதனை முயற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.

விருதுநகரில் தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருபவர் ஹர்ஷ நிவேதா (14). இவர் விருச்சிகாசனம் செய்தவாறு கியூப்பஸிலை 17.01 விநாடிகளில் செய்து முடித்து கின்னஸ் உலக சாதனை முயற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்.

இது தொடர்பான வீடியோவை கின்னஸ் ரெக்கார்ட் அழைப்புக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்ட மாணவியை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகௌரி, மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா, யோகா ஆசிரியை இந்திரா, கியூப் பஸில் பயிற்சியாளர் உமா மாரீஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img