fbpx
Homeபிற செய்திகள்வாடிக்கையாளர் பிரத்யேக சேவைக்காக ‘விவோ இந்தியா சேவை தினம்’ உருவாக்கம்

வாடிக்கையாளர் பிரத்யேக சேவைக்காக ‘விவோ இந்தியா சேவை தினம்’ உருவாக்கம்

உலக அளவில் புதுமை மிக்க ஸ்மார்ட்போன் பிராண்டாக திகழும் விவோ நிறுவனம், தனது வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் வாங்கிய பின்பு எந்த விதமான பிரச்சினைகளும் இல்லாமல் இருப்பதற்காக, ‘விவோ இந்தியா சேவை தினம்’ என்னும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

‘விவோ இந்தியா சேவை தினம்’என்னும் இந்த புதிய திட்டம் வரும் டிசம்பர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் 19 மற்றும் 20-ம் தேதிகளில் தங்கள் ஸ்மார்ட் போன்களை எந்த வித சேவை கட்டணமும் செலுத்தாமல் சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

அன்றைய தினம் ஸ்கிரீன் கார்டு, பின்புற கவர் போன்றவை இலவசமாக வழங்கப்படும். குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான சலுகைகளும் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன்மரியா கூறுகையில், ‘எங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் எங்களின் இதயம் போன்றவர்கள்.

அவர்களுக்கு சிறப்பான சேவை வழங்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்தியா முழுவதும் 600-க்கும் மேற்பட்ட சேவை மையங்களை துவக்கி செயல்படுத்தி வருகிறோம்.

இங்கு வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவைகள் வழங்கப்படுகின்றன. தற்போது நாங்கள் அறிவித்துள்ள ‘விவோ இந்தியா சேவை தினம்’ என்னும் இந்த திட்டம் குறிப்பாக வரவிருக்கும் பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பலன் அளிப்பதாக இருக்கும்.

வர்த்தகத்தை பொறுத்தவரை அனைத்து நிலையிலும் வாடிக்கையாளர்க ளுடனான உறவு என்பது மிக முக்கியமானது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
அதில் விற்பனைக்கு பிந்தைய நிலை என்பது மிகவும் முக்கியமான ஒரு பகுதியாகும்.

இந்த தினத்தில் உதிரி பாகங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் சுமையை குறைக்கும் விதமாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img