fbpx
Homeபிற செய்திகள்வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்று முதல் நவ.29 வரை வரை ‘ரெட்...

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: இன்று முதல் நவ.29 வரை வரை ‘ரெட் அலர்ட்’

தென்மேற்கு வங்கக்கட லில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கட லில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழக கடலோர பகுதி களில் வடகிழக்கு திசையை நோக்கி வரும் புயல் சின்னம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இன்றைய தினம் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப் புரத்தில் கனமழை பெய்யும். இதேபோல் நாமக்கல், கரூர், திருவள்ளூர், கன்னியா குமரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும்.

தமிழ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி 27 செ.மீ., திருச்செந்தூர் 25 செ.மீ., நாகை 19, ஸ்ரீவைகுண்டம் 18, குலசேகரப்பட்டினம் 16, வைப்பாறில் 15 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

காரைக்கால், திருவையாறு, சாத்தான்குளம், ஓட்டப் பிடாரம், பெலந்துறையில் தலா 12 செ.மீ. மழை பெய்தது. திருபுவனம், ஸ்ரீமுஷ்ணம், சாத்தூர், பேராவூரணி, லெப்பை குடிகாடு, பாளையங் கோட்டையில் தலா 11 செ.மீ. மழை பொழிந்தது. தொடர்ந்து திண்டுக்கல், திருவாரூர், பூதலூர், அகரம் சீகூர், வெம்பக்கோட்டை, சிவகங்கையில் 10 செ.மீ. மழை பெய்தது.

தாம்பரம், மணிமுத்தாறு, நன்னிலம், காட்டுக்குப்பம், செம்பரம் பாக்கம், கடம்பூர், மணி யாச்சியில் தலா 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று ரெட் அலர்ட் அறிவிக்கப் பட்டிருந்தது.

இன்றைய தினம் அதிக கனமழை இருக்கும் மாவட்டங்களாக கன்னியாகுமரி, திருநெல் வேலி, தென்காசி மாவட்டங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் இன்று முதல் நவம்பர் 29 வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வரும் 29ம் தேதி தெற்கு அந்தமான் கடலோரப் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால், நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலுர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு வெள்ள அபாயம் ஏற்படலாம் என மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் எச்சரித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img