கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை அமைச்சர் கயல்விழி தலைமையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் நலத்துறை அமைச்சர் கயல்விழி வந்தார்.
அப்போது, தொழில் கடன் மானியம் மூலம் பெறப்பட்ட கார், வேன் உள்ளிட்ட 3 வாகனங்களை பயணிகளுக்கு வழங்கினார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் கயல்விழி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
கோவை மண்டலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டப் பணிகள்,
மக்களின் கோரிக்கைகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.