கோயமுத்தூர் மெட்ரோபா லிடன் ரவுண்ட் டேபிள்-62,கோயமுத்தூர் மெட்ரோ பாலிடன் லேடீஸ் சர்க்கிள் 23, கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனை ஆகியன இணைந்து வடமதுரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறைகளும், கலிக்கநாயக்கன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் ரூ.24லட்சத்தில் புதிதாக 2 வகுப்பறைகள் மற்றும் கழிப்பறை கட்ட திட்டமிட்டுள்ளன.
வடமதுரையில் நடந்த பூமி பூஜைக்கு ரவுண்ட் டேபிள் அமைப்பின் தலைவர்கள் சூரிய நாராயணமூர்த்தி,மீனாட்சி மெய்யப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
குருடம்பாளையம் ஊராட்சி மன்றத்தின் தலைவர் டி.ரவி, சின்னத்தடாகம் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் டி.என்.வேலுச்சாமி,மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அதிகாரி மேரி மார்க்கரெட், ஒன்றிய கவுன்சிலர் ஆறுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோவை மெடிக்கல் சென்டர் மற் றும் மருத்துவமனையின் செயல் இயக்குநர் அருண்பழனிச்சாமி பூமி பூஜையைத் தொடக்கி வைத்தார்.
இதில் பள்ளிக்கல்விக்குழுத் தலை வர் வேலுச்சாமி,ஊராட்சி மன்ற உறுப்பினர் வளர்மதி,பள்ளி த¬ லமை ஆசிரியை ஜெ.ஜாய்ஸ் பிரேமா, 24,வீரபாண்டி அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாமிநாதன், ஆசிரியை ஏஞ்சலின் சாலினி, கட்டிட பொறியாளர் என்.ஜெயபிரேம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



