Homeபிற செய்திகள்ரூ.169 கோடியில் ‘ஸ்மூத்’ ஆக மாறும் கோவையின் 456 சாலைகள்

ரூ.169 கோடியில் ‘ஸ்மூத்’ ஆக மாறும் கோவையின் 456 சாலைகள்

கோவை மாநகரில் 456 சாலைகள் ரூ.169 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன. கோவை மாநகரில் பிரதான பிரச்சனையாக இருப்பது முறையான சாலை வசதிகள் இல்லாததே. எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமான சாலை களால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆங் காங்கே விபத்துகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மாநகரில் உள்ள சாலைகள் சீரமைக்காமல் இருப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்ததே காரணமாக இருந்தது. இந்த நிலையில் மாநகரில் உள்ள 456 சாலைகளை மேம் படுத்த ரூ.169 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வழியாக கோவை மக்களின் சாலை பயண அனுபவத்தை மேம்படுத்தும் முழற்சியில் இறங்கியுள்ளது கோவை மாநகராட்சி. இந்த நோக்கில் கோவையிலுள்ள 456 சாலைகளை சீரமைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பெறப்பட்ட மக்கள் மன்ற மனுக்களின் அடிப்படையில் இந்த 456 சாலைகள் மேம்பாடு செய்வதற்காக தேர்வு செய்யப்பட் டுள்ளன.

இணைப்பு சாலைகளை மேம்படுத்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர சாலை மேம்பாட்டு பணிக்காக தமிழ்நாடு நிலையான நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேதமடைந்த சாலைகளில் ‘பேட்ச் ஒர்க்‘ செய்ய ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “சாலைகளின் தற்போதைய நிலையைப் பொறுத்து பல் வேறு கட்டங்களாக இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

தற்போது சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள 456 சாலைகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளன. தவிர மராமத்து வேலை மட்டும் தேவைபடுகின்ற சாலைகளின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர மேலும் 289 சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன. கடந்த மே 8-ம் தேதி அமைச்சர் கே.என். நேரு, கோவை வந்தபோது, இதற்கான பரிந்துரையை செய் துள்ளார்.

கூடுதலாக சாலை இணைப் பிலுள்ள இடைவெளிகளும் சரி செய்யப்படும். இதனால் சாலை போக்குவரத்திலுள்ள இடர் பாடுகளை நீக்கி தடையற்ற போக்குவரத்தை மேம்படுத்த முடியும்“ என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img