fbpx
Homeபிற செய்திகள்ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்- திருச்சி சிவா சிறப்புரை

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்- திருச்சி சிவா சிறப்புரை

ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான கா தர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு முன்னிலை வகித்தார்.இதில் பாராளுமன்ற உறுப்பினர் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திருச்சி சிவா மற்றும் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் சத்தி யமூர்த்தி சுந்தரராஜன், கமுதி ஒன்றிய கழகச் செயலாளர் வாசுதேவன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர். கே.கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் கீழக்கரை நகர் துணைச் செயலாளர் எம்.எஸ்.ஜெய்னுதீன், உள் மாவட்ட ஒன்றிய நகர கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசிய தாலது:- அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சி திராவிட சித்தாந்தங்கள் சமூக பொருளாதார வளர்ச்சி கல்விதான் திராவிட மாடல் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 11 இடங்களில் கீழக்கரை நகர மன்றத்தில் திமுக மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள்.

அதில் ஒரு பெண் தலைவராக தேர்வு செய்யப் பட்டு இன்று பதவியில் உள்ளார். இதுதான் திராவிட மாடல். இவ்வாறு எம்.எல்.ஏ பேசினார்.
தொடர்ந்து திமுக கொள்கை அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா பேசியதாவது:- திராவிட மாடல் என்பது பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பது.

பெரியா ரின் இயக்கம் திராவிடர் கழகம். அதிலிருந்து பிரிந்து அரசியல் கட்சியானது திராவிட முன்னேற்ற கழகம். இது ஏனென்றால் இது அறிஞர் அண்ணாவின் சிந்தனை யில் உருவான கட்சி பெரியார் சுயமரியாதை திரும ணத்தை கொண்டு வந்தார். இதை ந¬ டமுறைப்படுத்தியவர் அறிஞர் அண்ணா.

ஆகவே திராவிடர் களாகிய நம் எல்லோருக்கும் சேர் த்து உருவானது தான் திராவிட முன்னேற்றக் கழகம் திமுக அரசியல் கட்சியாக திராவிடர்கள் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும் என்று தான் அறிஞர் அண்ணா திமுகவை அரசியல் கட்சியாக உருவாக்கினார். இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.

பின்னர், அறிஞர் அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், வன்மையைதவிர்த்து வறுமையை ஒழிப்போம்.

மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று திமுகவின் தாரக மந்திரத்தை உறுதி மொழியாக திமுக எம்பி திருச்சி சிவா கூற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img