திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளை பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதாசாகேப் பால்கே விருதை துணை ஜன £திபதி வெங்கையா நாயுடு வழங்கினார். இந்நிலையில், ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி அவர்கள், தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்! இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.



