fbpx
Homeபிற செய்திகள்மூத்த குடிமக்கள் குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 14567 - கோவை ஆட்சியர் அறிவிப்பு

மூத்த குடிமக்கள் குறைகளைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 14567 – கோவை ஆட்சியர் அறிவிப்பு

மூத்த குடிமக்கள் தங்களுக்கு நேரிடும் பிரச்சனைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து உதவிகள் பெற 14567 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில் தெரிவித் துள்ளதாவது:
முதியோர்களின் அனைத்து குறைகளைத் தெரிவிப்பதற்கு தமிழக அரசு மத்திய அரசுடன் இ¬ ணந்து உதவி எண்களை அறிவித்துள்ளது.

மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் 2007 செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கபட்டு செயல்பாட்டில் உள்ளது.

முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய சமூக நீதி அமைச்சகம் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டணமில்லா அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது.

முதியோர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு கட்டணமில்லா உதவி எண்- 14567 வசதி தொடங்கப்பட்டுள்ளது.

முதியோர் ஹெல்ப் லைன் மூலமாக வழங் கப்படும் சேவைகள்:முதியோர் இல்லங்கள் பராமரிப்பு மையம் பராமரிப்பாளர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள் வலி நிவாரண மையங்கள் குறித்து முதியோர்களுக்கு தேவைப்படும் தகவல்கள்.

அரசு திட்டங்களை பெறும் வழிமுறைகள் சட்ட வழிகாட்டுதல்கள் பராமரிப்பு சட்டம் குறித்த வழிகாட்டுதல்கள்.

மனதளவில் பாதிக் கப்பட்டவர்களுக்கு ஆலே £சனை மற்றும் ஆதரவு. ஆதரவற்ற இடரில் உள்ள முதியோர் மீட்பு குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் துன்புறுத்தப்படும் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து பிரச்சனைகளை தீர்க்க வழிகாட்டுதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

உதவி மையம் அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.

எனவே மூத்த குடிமக்கள் தங்களுக்கு நேரிடும் பிரச்சனைகள் மற்றும் குறைகளைத் தெரிவித்து உதவிகள் பெற 14567 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img