சென்னை, அடையாறு, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் குழு சிக்கலான லேப ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சையை கடுமையான பித்தப்பை அழற்சியுள்ள 93 வயது மூதாட்டிக்கு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இந்த மூதாட்டி 3 வருடங்களுக்கு முன்பு பித்தப்பைக் கற்களை அகற்ற ஸ்டெண்ட் சிகிச்சையை மேற்கொண்டார். அவரது பித்தப்பை சரியாக இயங்காததால், சிக்கல் களும், பிரச்சினைகளும் தோன்றின.
இவரை சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மருத் துவமனை இரைப்பைக் குடல் மூத்த அறுவை சிகிச்சை நிபுணரும், மினிமல் அக்ஸெஸ் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கபாலி நீலமேகம் கூறியதாவது:
தீவிர வயிற்றுவலிமற்றும் வாந்தியுடன் நோயாளி என்னிடம் அழைத்து வரப் பட்டார். பரிசோதனையில் அவருக்குக் கடுமையான பித்தப்பை அழற்சி இருப் பது உறுதியாகவே, அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
மயக்க மருத்து நிபுணர் கள் டாக்டர் வித்யா மோகன்ராம் மற்றும் டாக்டர் ஷினு அப்துல் ரஷீத் உதவியுடன், டாக் டர் மோகன் ராவும், டாக் டர் நரேஷும், நானும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்தோம்.
பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுத்துப் பார்த்ததில், அதைச் சுற்றி சீழ் வழிந்ததாலும், கேலாட் முக்கோணம் உறைந்ததா லும், அறுவை சிகிச்சை செய்யச் சிரமப்பட்டோம்.
கேலாட் தடிமனானதாலும், பித்தப்பைப் புண் சீழில் மூழ்கியிருந்ததாலும், நீர்மக் குழாய் வரை சென்று அதை அகற்றினோம். அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்துக்குப் பிறகு நோயாளி வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.
கோவிட் தொற்று நோய்க்கு முன் ஒவ்வொரு மாதமும் 3-4 நோயாளிகளுக்கு மட் டுமே சிகிச்சை அளித்த நிலையில், இரண்டாம் அலைக்குப் பிறகு மாதம் சராசரியாக 22-25 நோயாளிகள் பித்தப் பைக்கோளாறுகளுடன் வருகின்றனர்.
கோவிட் பிந்திய காலகட்டத்தில் சீழும் புண் ணுடன் கூடிய பித்தப்பை அழற்சி இளைஞர்களிடம் அதிகம் காணப்படுகிறது.
சாதாரண பித்தக் கல் சிகிச்சைக்கு வந்து குணமடைய வேண்டியவர் கள், இப்போது பித்த நாளத் தில் பித்தக் கற்களுடன் தாமதமாக வருவதால், மஞ்சள் காமாலை நோய்க்கே வழிவகுக்கிறது என்றார்.



