தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் சந்தித்து, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் 2020-21 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பங்கு ஈவுத் தொகையான 10 கோடியே 38 லட்சத்து 57 ஆயிரத்து 965 ரூபாய்க்கான வங்கி வரைவோலையை வழங்கினார்.
உடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் தலைவர் (பொறுப்பு) சையது முசாமிஸ் அப்பாஸ், மேலாண்மை இயக்குநர் யோகேஷ் சிங் ஆகியோர் உள்ளனர்.



