fbpx
Homeபிற செய்திகள்மாவட்டத்தில் ரூ.72.28 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணி: நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு

மாவட்டத்தில் ரூ.72.28 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணி: நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில், உதகை நகராட்சி, உதகை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சோலூர் பேரூரா ட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.72.28 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேற்று (செப்.7) செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
முதல்வர் மு.க.ஸ்டா லின் தலைமையிலான அரசு பொது மக்களின் நலன் கருதி பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக, நமது மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட ர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், உதகை தலைக்குந்தா பகுதியில் ரூ.7.36 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கம்பி வலை தடுப்பு சுவர், ரூ.8.96 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கம்பி வலை தடுப்புச் சுவர், ரூ.6.28 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட நிலச்சரிவு கான்கிரீட் தடுப்புச் சுவர், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லட்டி முதல் தட்டனேரி சாலையில் நிலச் சரிவு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஐந்து இடங்களில் ரூ.34.61 இலட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கம்பி வலை சுற்றுச்சுவர், உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட மாசிக்கல் பகுதியில் ரூ.7.50 இலட்சம் மதிப்பில் முடிக் கப்பட்ட ஓடைக்கரை கம்பி வலை தடுப்புச்சுவர், சோலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தட்டனேரி சாலை பகுதியில் ரூ.7.57 இலட்சம் மதிப்பில் முடிக் கப்பட்ட கம்பி வலை தடுப்புசுவர் என மொத்தம் ரூ.72.28 இலட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச் சித் திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் ஆய்வு செய் யப்பட்டன
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, உதவி செயற் பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) ஜெய பிரகாஷ், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டபொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் (வேளாண் பொறியியல் துறை) ராதாகிருஷ்ணன், குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img