பெரியநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் வசிக்கும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை அருகே கவுண்டம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கோவை மாவட்ட கல்வித் துறை வாயிலாக செயல்படுத் திடும் சமக்ர சிக்சா எனப்படும் ஒருங்கி¬ ணந்த கல்வி திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 18 வயது வரையிலான வயதுடைய மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வியை வழங்குகிறது.
அனைத்து வகையான ஊனங்களைக் கொண்ட எல்லா குழந்தைகளுக்கும் தேவை யான உதவி உபகரணங்கள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் பெரியந £யக்கன்பாளையம் வட்டாரத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்கென அரசு நடுநிலைப் பள்ளி வளாக த்தில் செயல்படும் பகல் நேரப் பாதுகாப்பு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆர்.ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட உள்ளடங்கிய கல்விப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் மாற்றுத்திறன் குழந்தை களுக்கு பார்வையற்ற, குறைபாடுள்ள குழந்தை களுக்கான பிரெய்லி கிட்,இயக்கக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான ஊன்று கோல், மூளை முடக்குவ £தத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சிறப்பு இருக்கை, சக்கர நாற்காலி வண்டி,சிறப்பு நடைபயிற்சி வண்டி, மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு பை,செவித்திறன் குறைந்த குழந்தைகளுக்கு காதொலிக் கருவி ஆகியவற்றை வழங்கினார்.
அப்போது கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கீதா, உதவி திட்ட அலுவலர் பெல்ராஜ் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி கோவை மாவட்டத்தில் ரூ.23.68 லட்சம் மதிப்பீட்டில் 586 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப் பட்டுள்ளன.
மேலும் மாதாமாதம் 1002 குழந்தைகளுக்கு ,பெண் குழந்தைகள் மற்றும் வீட்டு வழிப்பயிற்சி பெறும் குழந்தைகளுக்கான படிப்பு உதவித் தொகையாக தலா ரூ.200 வழங்கப்படுகின்றன.
64 சிறப்புக் கல்வி ஆசிரியர்களும், 11 பிசியோதெரபிஸ்டுகளும் இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றனர்.நிகழ்ச்சியில் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆர்.நித்யா, சிறப்புக் கல்வி ஆசிரியர்கள் தேன்மொழி ராணி ஸ்ரீபிரியா, பாதுகாப்பு மைய ஆசிரியர் உமா மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



