கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் மாணவ மாணவிகள் தேசிய தலைவர்கள், பூக்கள், பழங்கள், கார்ட்டூன் கதாப்பாத்திர வேடங்கள் அணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாறுவேடப் போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில் எல்.கே.ஜி, யூகேஜி, ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் 130க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் எல்.கே.ஜி மற்றும் யூகேஜி மாணவ மாணவிகள் தேசிய தலைவர்களான காந்தி, நேரு, இந்திராகாந்தி, ராணி லட்சுமி பாய், பாரதியார், வாழைப்பழம், ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் மற்றும் சூரியகாந்தி பூ வேடம் அணிந்து திறமைகளை வெளிப்படுத்தினர்.
முதலாம் வகுப்பு மாணவ மாணவிகள் மருத்துவர், காவலர், தேவதை, கடவுள், வண்ணத்துப் பூச்சி, ஸ்பைடர் மேன் உள்ளிட்ட கார்ட்டூன் கதாப்பாத்திர வேடங்கள் அணிந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் இரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் இயற்கையை காப்போம் என்ற கருப்பொருள் அடிப்படையில் பல்வேறு வேடமணிந்து நெகிழி இல்லாத உலகம் படைப்போம், மறு சுழற்சி செய்து சுற்றுச் சூழல் வளம் காப்போம் என்னும் பயனுள்ள கருத்துக்களை கூறினர்