தென்காசி மாவட்டத்தில், மாநில அளவில் நடத்தப்பட்ட ‘குறளோவியம்’ ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் வழங்கினார்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தால், மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு என ‘குறளோவியம்’ என்ற பெயரில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் 365 சிறந்த ஓவியங்கள் தெரிவு செய்யப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல்வர் பரிசுகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, தென்காசி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நேற்று (மே 5) ஊக்கப்பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட இலஞ்சி ராமசாமி பிள்ளை உயர்நிலைப்பள்ளி மாணவியர் எம். பூர்ணிமா (11-ம் வகுப்பு), சா. நிலோபர்(8-ம் வகுப்பு), பே. சுரேகா, (11-ம் வகுப்பு), வியாசா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவி ஆ. சாரா பானு பி.எஸ்.சி ஆகியோருக்கு சான்றிதழ்கள் மற்றும் தலா ரூ.1000 ஊக்கப்பரிசுத் தொகைக்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் வழங்கினார்.
இக்குறளோவியப் போட்டி யில் தெரிவு செய்யப்பட்ட 365 ஓவியங்களும் ‘திருக்குறள் குறளோவியம்’ தினசரி நாட்காட்டி புத்தகமாக அச்சிடப்பட்டு, பொது மக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்கள்:
- எம்.பூர்ணிமா (11-ம் வகுப்பு)
திருக்குறள்- கூடா நட்பு-(83)
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். - சா.நிலோபர் (8-ம் வகுப்பு)
பிரிவு ஆற்றாமை-(116)
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்குஉண்டோதவறு. - பி.சுரேகா (11-ம் வகுப்பு)
புலவி நுணுக்கம்-132
கோட்டுப்பூச்சூடினும்காயும்ஒருத்தியைக்
காட்டியசூடினீர்என்று - அ. சாரா பானு
வியாசா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.



