HCL நிறுவனம் இந்தியாவின் முதன்மையான மற்றும் முக்கியமான பகுத்தறிவு தளமான CL Jigsaw போட்டியின், இரண்டாவது பதிப்பிற்கான போட்டியாளர்களை தற்போது வரவேற்றுள்ளது.
புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மாணவர்களின் திறனாய்வு சிந்தனையில் CL Jigsaw அதிக கவனம் செலுத்துகிறது. பல அடுக்கு மதிப்பீட்டு செயல்முறைகள் மூலம் இந்தியாவின் சிறந்த இளம் புதிர் தீர்க்கும் மாணவர்களை அடையாளம் கண்டு, விருது வழங்குவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களின், ஆராய்ச்சி, திறனாய்வு மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட 21-ம் நூற்றாண்டின் முக்கிய திறமைகளை மதிப்பிடுவதோடு, மாணவர்கள் அவற்றை தங்கள் நிஜ வாழ்க்கையில் வரும் சவால்களை தீர்ப்பதற்கு பயன்படுத்தவும் இது உதவுகிறது.
HCL Jigsaw இரண்டாம் பதிப்பில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் அல்லது பள்ளிகள், வரும் நவம்பர் 26-ம் தேதிக்குள் www.hcljigsaw.com http://www.hcljigsaw.com என்ற இணைய தள பக்கத்தில் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
டிசம்பர் 3 முதல் 8 -ம் தேதி வரை தகுதி போட்டிகள், டிசம்பர் 18-ம் தேதி அரையிறுதி, டிசம்பர் 19-ம் தேதி இறுதிப் போட்டி என மொத்தம் மூன்று சுற்றுகளாக நடைபெறும்.
வெற்றியாளர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப் புள்ள பரிசுப் பொருட்கள் மற்றும் கேஜெட்டுகள் வழங்கப்படும். HCL பொறியியல் மற்றும் புதுமை ஆய்வகங்களில் கற்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
இதுகுறித்து HCL கார்ப்பரேஷனின் மூலோபாயத் தலைவர் சுந்தர் மகாலிங்கம் கூறியதாவது: HCL Jigsaw வுக்கு பள்ளிகள் மற்றும் மாணவர்கள் அளித்த வரவேற்பை தொடர்ந்து, தற்போது இரண்டாம் பதிப்பை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
HCL Jigsaw, மாணவர்களின் புதிர் தீர்க்கும் திறன் மற்றும் திறனாய்வு சிந்தனை திறன்களை, தேவைப்படும் சூழ்நிலைகளுக்கு வெளிப்படுத்தக் கூடிய வகையில் வடி வமைக்கப்பட்டிருந்தாலும், இந்த இரண்டாவது பதிப்பில், ஆசிரியர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவும் திட்டமிட்டு உள்ளோம் என்றார்.
தேர்ந்தெடுக்கப் பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள், பயிற்சிப் பட்டறைகள் மூலம் 21-ம் நூற்றாண்டின் மேம் பட்ட ஆசிரியர் திறன்களைப் பெற்று, அவர்களது மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கலாம்.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், புதிர் தீர்க்கும் செயல் முறையின் 3 அடிப்படை பண்புகளின் கீழ், மொத்தம் 10 அளவுருக்களில் மதிப்பீடு செய்யப்பட உள்ளனர்.



