இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றாகவும், டிராக்டர் உற்பத்தி எண்ணிக்கையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமாகவும் இருக்கும் மஹிந்திரா அண்டு மஹிந்திரா லிட்., தனது புதிய பொலெரோ நியோவை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மஹிந்திரா டீலர்களிடம் இந்த புதிய வாகனம் கிடைக்கும். புதிய பொலெரோ நியோவின் என் 4 வேரியண்ட்டின் விலை ரூ.8.48 லட்சம் (எக்ஸ்-ஷோ ரூம் எக்ஸ்எக்ஸ்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எம் அண்டு எம் லிமிடெட்டின், ஆட்டோ மோட்டிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் நாக்ரா கூறியதாவது:
பொலெரோ நியோ, எந்த சூழ்நிலையிலும் கட்டுக்கோப்பான உறுதி யுடன் இயங்கும்.
புதிய பொலெரோ நியோவின் அட்டகாசமான வடிவ மைப்பு, அபாரமான செயல் திறன் மற்றும் அசத்தலான பொறியியல் மேம்பாட்டு அம்சங்கள், இன்றைய இளம் இந்தியாவுக்கு ஏற்ற நவீன, அசல் எஸ்யூவியாக முன்னிறுத்தி இருக்கின்றன என்றார்.
எம் அண்டு எம் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் உலகளாவிய தயாரிப்பு மேம்பாட்டுத் தலைவர் வேலுசாமி கூறுகையில், ஸ்கார்பியோ, தார் ஆகிய இரு வாகனங்களின் வடிவமைப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்ட சேஸிஸ் சின் மூன்றாம் தலைமுறை சேஸிஸ் கொண்டு கட்டமைக்கப்பட்ட, பொலெரோ நியோ சக்திவாய்ந்த குணாதிசயங்களைக் கொண்டுள்ளது.
எந்தவிதமான நிலப்பரப் பிலும் அனாயாசமாக பயணிக்கும் ஆற்றலை அளிக்கும் மல்டி டெ ரெய்ன் டெக்னாலஜி ஆகியவை பொலெரோ நியோவுக்கு கரடுமுரடான நிலப்பரப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் திறனையும் நம்பிக்கையையும் அளிக்கிறது என்றார்.
புதிய பொலெரோ நியோ, மூன்று வகைகளில் (என் 4-பேஸ், என் 8-மிட், என் 10-டாப் மற்றும் ஏழு வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன.உலகப் புகழ்பெற்ற இத்தாலிய ஆட்டோமோட்டிவ் டிசைனர் ஃபினின் ஃபரினா இதனை வடிவ மைத்துள்ளார்.
தற்போது சாலைகளில் வலம் வரும் பொலெரோ, சந்தையில் பொலெரோ நியோவுடன் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.