Homeபிற செய்திகள்மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் அறிமுகப்படுத்தும் ‘நிருத்யாஞ்சலி’

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் அறிமுகப்படுத்தும் ‘நிருத்யாஞ்சலி’

மிகப்பெரிய தங்கம் மற்றும் வைர சில்லறை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், அதன் சமீபத்திய புதிய நகை கலெக்சனான ‘நிருத்யாஞ்சலி’- யை இந்தியாவின் நடனங்களுக்கு அர்ப்பணிப்பு செலுத்தும் வகையில், அதன் ஷோரூம்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கோவை கிளையின் சார்பாக ‘நிருத்யாஞ்சலி’ கலெக்சன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கலெக்சனை ராஜி, பூவிழி ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், கோவை மலபார் கோல்டு டைமண்ட்ஸ் கிளை தலைவர் மனு,
மலபார் கோல்டு டைமண்ட்ஸ் மேலாண்மை பயிற்சி ராகுல், மலபார் கோல்டு டைமண்ட்ஸ் கோவை கிளை வர்த்தக மேலாளர் தேவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தெய்வீக பிராண்டான டிவைன் (நிருத்யாஞ்சலி) என்பது நயமான இந்திய பாரம்பரிய நடன வடிவங்களின் அழகை தூய்மையான தங்கத்தில் நேர்த்தியாக செய்யப்பட்ட நகை கலெக்சன் ஆகும்.
ஒவ்வொன்றும் 100% BIS ஹால்மார்க் தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்ட கைவினைப் பொருளாக உள்ளது.

உயர்வான நேர்த்திக்காக விலைமதிப்புமிக்க ரத்தினக் கற்களால் பதிக்கப்படுகின்றன. நேர்த்தியான வளைவுகள் மற்றும் பதிக்கப்பட்ட நகைகள் வடிவமைப்புகளுக்கு கூர்மையான பரிமாணத்தை கூட்டுகின்றன.

இது கிளாசிக்கல் நடன வடிவங்களின் வெவ்வேறு தோற்றங்கள், வடிவங்கள் மற்றும் முத்திரைகளை சித்தரிக்கின்றன.

‘நிருத்யாஞ்சலி’ கலெக்சன் தற்போது ஆந்திரா, தெலுங்கானா முழுவதிலும் உள்ள மலபார் கோல்டு டைமண்ட்ஸ் கடைகளில் கிடைக்கிறது. மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அகமது பேசுகையில், “வாடிக்கையாளர்களின் வாழ்வின் ஒவ்வொரு சிறப்பான தருணத்திலும் நாங்கள் ஒரு பகுதியாக இருப்பதாக நம்புகிறோம்.

ஒவ்வொரு தருணத்திற்கும் ஏற்ற தனித்துவமான கலெக்சன்கள் உயர்வான தரம் மற்றும் வாடிக்கையாளர் சேவையை அவர்களுக்கு வழங்குகிறோம்.

‘நிருத்யாஞ்சலி’ தொகுப்பின் மூலம், எங்கள் பிராண்டுடன் தொடர்புடைய பாரம்பரிய மற்றும் கலை மதிப்புகளை முன்னிலைப்படுத்தவும், இந்தியாவின் பாரம்பரிய நடனங்களுக்கு மரியாதை செலுத்தவும் விரும்புகிறோம்” என்றார்.

இந்திய வரலாற்று நகரமான காலிகட்டில் 1993-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பிராண்ட் தற்போது 10 நாடுகளில் 280-க்கும் மேற்பட்ட கடைகளை இயக்குகிறது.

படிக்க வேண்டும்

spot_img