fbpx
Homeபிற செய்திகள்மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றம்

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் அகற்றம்

மதுரையின் முக்கிய பகுதியான பீ.பீ.குளம் நேதாஜி சாலை பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 22 ஏக்கர் பரப்பளவில் நீர் பிடிப்பு கண்மாய் இருந்தது.

தொடர்ந்து சில நபர்களால் இந்த கண்மாய் பகுதி சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்து தற்போது கிட்டத்தட்ட 1 ஏக்கர் பரப்பளவிற்கு இந்த கண்மாய் ஆக்கிரமிக்கப்பட்டு கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட வீடுகள்,மற்றும் கடைகள் சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்தது.

வழக்கின் முடிவில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்ததின் படி மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் உத்தரவின் பேரில்சுமார் 100 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களின், பாதுகாப்புடன், மதுரை வடக்கு வட்டாட்சியர் முத்து விஜயன் தலைமையில், வருவாய் துறையை சேர்ந்த அதிகாரிகளும், மதுரைமாவட்ட தலைமை பொறியாளர் சுகுமார்,கண் காணிப்பு பொறியாளர் மொக்கமாயன், உதவி பொறியாளர்கள் மாயகிருஷ்ணன், ராஜ்குமார், செல்லையா,மற்றும் பாசன ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

படிக்க வேண்டும்

spot_img