கோவையில் கள்ளச் சாராயம் மற்றும் மது பானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.
கோவை மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை சார்பில் மதுபானம் மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரம் இன்று நடைபெற்றது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை ஆட்சியர் சமீரன் இன்று துவக்கி வைத்தார்.
இதில் நாட்டுப்புற கலைஞர்கள் கரகாட்டம் ஆடியும், மரக்கால் ஆட்டம் ஆடியும் மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு வாகனத்தையும் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.



