fbpx
Homeபிற செய்திகள்மக்கள் குறைதீர் கூட்டத்தில் 415 கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியர் சமீரன் உத்தரவு

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 415 கோரிக்கை மனுக்கள் நடவடிக்கை எடுக்க கோவை ஆட்சியர் சமீரன் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (நவ.7) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டன.

முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன்.

பொதுமக்களிடமிருந்து இலவச வீடு வேண்டி 80 மனுக்களும், வீட்டு மனைப்பட்டா வேண்டி 96 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 22 மனுக்களும், 217 இதர மனுக்கள் என மொத்தம் 415 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

சம்மந்தப்பட்ட துறை அலுவலர் களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற் கொள்ளுமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலாஅலெக்ஸ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) டாக்டர் பி.அலர்மேல் மங்கை, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சௌமியா ஆனந்த் , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், வருவாய் கோட்டாட்சியர்கள் பூமா, பண்டரிநாதன், தனித் துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் முருகேசன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) எம்.செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img