Homeபிற செய்திகள்போகலூர், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

போகலூர், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மற்றும் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் வைரவனேந்தல் காமன்கோட்டை சாலை முதல் கே.கருங்குளம் சாலை வரை சுமார் 3.70 கிலோமீட்டர் நீளத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூபாய் 243.32 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், மென்னந்தி நாகாச்சி ஊராட்சியில் 14 வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 4.34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் சாலை பணியினையும், காமன்கோட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு சங்க கட்டடப் பணியினையும், அதனை தொடர்ந்து பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 1.60 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட நூலகக் கட்டடத்தினையும்,நூலகக் கட்டடம் முன்பாக 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூபாய் 1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் சாலை பணியி¬ னயும் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல அனைவருக்கும் வீடு-பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் வீடு கட்டுமான பணிகளையும், மேலப்பெருங்கரை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 156 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் பண்ணைக் குட்டை பணியினையும், கமுதக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இலந்தைக்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் பரமக்குடி வட்டாட்சியர் தமீம் ராஜா,போகலூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img