fbpx
Homeபிற செய்திகள்பொள்ளாச்சியில் ஆபத்தான இரு இடங்களில் உயர்மட்ட பாலங்கள்: ஆய்வுக்குப் பின் எம்.பி. தகவல்

பொள்ளாச்சியில் ஆபத்தான இரு இடங்களில் உயர்மட்ட பாலங்கள்: ஆய்வுக்குப் பின் எம்.பி. தகவல்

பொள்ளாச்சியில் மழையால் போக்குவரத்து துண்டிக்கப்படும் ஆபத் தான இரு இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் என ஆய்வு செய்த எம்.பி. தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பரவலாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியின் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சோலையார் அணை, பரம்பிக்குளம் அணை, ஆழியாறு அணை உள்ளிட்ட பல அணைகளிலும் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அதேபோல் பல்வேறு கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளும் நிரம்பி வருகின்றன. இதில் கோபால்சாமி மலை அருகே உருவாகி பல்வேறு கிராமங்களைக் கடந்து ஆழியார் ஆற்றில் கலக்கும் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தென் சித்தூர் கிராமத்திற்கு அருகேயும், பெத்தநாயக்கனூர் கிராமம் கெங்கம்பாளையம் அருகேயும் பாலாற்றின் குறுக்கே உள்ள இரு தரைப்பாலங்களும் வெள் ளத்தில் மூழ்கின.

இதனால் தரைப் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிப் படுகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் இந்த இரு தரைப்பாலங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் ஆனைமலை தாசில்தார் பானுமதி, ஆனைமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியம், தி.மு.க. ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரப்பன், தென் சித்தூர் ஊராட்சி மன்ற தலை வர் செல்வநாயகம் ராஜ மாணிக்கம், பெத்த நாயக் கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் உட னிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் எம்.பி.சண்முகசுந்தரம் கூறியதாவது, ஏராளமான கிராம மக்கள் இந்த தரை பாலத்தை கடந்தே பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்.
இதில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் உயர் மட்ட பாலம் கட்டி கொடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே இரு இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளோம்.

இரு இடங்களிலும் உயர்மட்ட பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் மாநில அரசின் நிதி கொண்டு இந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img