fbpx
Homeபிற செய்திகள்பேட்டரியால் இயங்க கூடிய ‘அக்ரி ஈஸி’: 10 ஆட்கள் செய்யும் வேலையை செய்யும் ஒரு கருவி...

பேட்டரியால் இயங்க கூடிய ‘அக்ரி ஈஸி’: 10 ஆட்கள் செய்யும் வேலையை செய்யும் ஒரு கருவி அறிமுகம்

10 வேலையாட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்ய கூடிய அளவில் வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் முழுவதும் பேட்டரியால் இயங்க கூடிய “அக்ரி ஈஸி” எனும் விவசாய எந்திரத்தை கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிமுகம் செய்து வைத்தார்.


விவசாயம் செய்யும் போது பயிர்களுக்குகளை எடுப்பது, மருந்து தெளிப்பது என மட்டுமின்றி சில மாற்று உபகரணங்களை உபயோகப்படுத்தி பளு தூக்க மற்றும் பல விவசாய பணிகளையும் செய்யும் விதத்தில் மின்சாரத்தில் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய அக்ரிஈஸி” இயந்திரம் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்தியாவிலேயே முதன்மையாக திகழும் புல் மெஷின்ஸ் நிறுவனம், கண்டுபிடித்த இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுவின் துணை இயக்குனர் ஜெனரல் ஷ்யாம் நாராயண் ஜா,மத்திய வேளாண்மை பொறியியல் இன்ஸ்ட்டியூட்டின் இயக்குனர் மேத்தா, ஆகியோர் புதிய வேளாண் எந்திரத்தை அறிமுகம் செய்து வைத்தனர். இதன் மூலம் 10 வேலையாட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்ய கூடிய அளவில் வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img