பெரியார் பல்கலைக் கழக கல்லூரிகளுக்கு இடை யேயான ஹாக்கி மற்றும் இறகுப்பந்து போட்டிகளில், தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.
நாமக்கல், பாவை கல்லூரியில் நடைபெற்ற ஹாக்கிப் போட்டியில், சேலம், தருமபுரி, கிருஷ் ணகிரி, நாமக்கல் மாவட் டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கு பெற்றன.
இறுதிச் சுற்றில், தருமபுரி, தொன்போஸ்கோ கல்லூரி அணியும், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி அணியும் விளையாடின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரி அணி வென்றது. ஒன்பதாவது முறையாக கோப்பையையும் கைப்பற்றி உள்ளது.
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்.கல்லூரியில் நடைபெற்ற பல்கலைக் கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான இறகுப் பந்துப் போட்டியில் 23 அணிகள் பங்கு பெற்றன. இதில் தருமபுரி தொன்போஸ்கோ அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பேராசிரியர் ம.சேவியர் டெனிஸ் ஆகியோரை கல்லூரி செயலர் முனைவர் எட்வின் ஜார்ஜ், முதல்வர் முனைவர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொரு ளாளர் ஜான், சமூகப் பணித்துறைப் பேராசிரியர் ஆண்டனி கிஷோர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்