fbpx
Homeபிற செய்திகள்பெங்களூரில் நைக்கா ஆன் டிரெண்ட் திறப்பு

பெங்களூரில் நைக்கா ஆன் டிரெண்ட் திறப்பு

இந்தியாவின் முன்னணி ஆம்னிசேனல் லைஃப்ஸ்டைல் இலக்கான நைக்கா தனது 100-வது பியூட்டி ஸ்டோரான, நைக்கா ஆன் டிரெண்ட் ஐ உலகளவில் கொண்டாடப்படும், பெங்களூரில் திறந்துள்ளது.

2014 -ம் ஆண்டு தில்லி விமான நிலையத்தின் ஜி3 டெர்மினலில் தனது ரீடைல் பயணத்தைத் தொடங்கிய நைக்கா இன்று 45 நகரங்களில் உள்ள நுகர்வோருக்கு உலகளாவிய ஆடம்பர பியூட்டி லேபிள்கள் மற்றும் நவநாகரீக இந்திய பிராண்டுகள் ஆகியவற்றின் இணையற்ற தொகுப்பை வழங்குகிறது.

100-வது ஸ்டோரின் அறிமுகம் குறித்து நைக்கா இ-காமர்ஸ் பியூட்டியின் சிஇஓ அஞ்சித் நாயர் கூறியதாவது: ஸ்டோர் ஒன்றிலிருந்து தற்போது நூறாவது ஸ்டோர் வரை, ஆம்னிசேனல் மாடலின் சக்தியின் மேல் எங்களின் நம்பிக்கை வலுவாக உள்ளது மற்றும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

எங்கள் வணிகத்தின் மையத்தில் புதுமை மற்றும் சுறுசுறுப்பினைக் கொண்டு எல்லையை விரிவுபடுத்தவும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங்கை முழுமையாக தடையற்றதாக மாற்றவும் நைக்கா தொடர்ந்து ரீடைல் விற்பனைக் கடைகளுக்கு புதிய பின் குறியீடுகளை ஆராய்ந்து வருகிறது.

எப்போதும் வளர்ந்து வரும் நுகர்வோர் நடத்தை மற்றும் அழகு டிரண்டுகளுக்கு ஏற்ப நவநாகரிகமான மற்றும் உண்மையான தயாரிப்புகளை வழங்குவதில் எங்கள் கவனம் உள்ளது. இது நுகர்வோரின் நம்பிக் கையைப் பாதுகாக்க எங்களுக்கு உதவியுள்ளது.

ஏறக் குறைய ஒரு தசாப்த காலமாக எங்கள் விற்பனைப் புள்ளிகள் அனைத்திலும் எங்களின் மீது அவர்கள் கொண்ட விசுவாசத்தைக் கண்டு மகிழ்வுடன் இருக் கிறோம் என்றார்.

முக்கிய பங்குதாரர் பிராண்டான எஸ்டீ லாடர் நிறுவனங்களின் இந்திய ஜிஎம், ரோஹன் வசிரல்லி கூறுகையில், இந்தியா முழுவதிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மதிப்புமிக்க கௌரவமான பியூட்டி அனுபவத்தை கொண்டு வர நைக்கா உடன் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறோம் என்றார்.

நைக்கா லக்ஸ் ஸ்டோரானது நைக்கா லக்ஸ் கோயம்புத்தூர் ப்ரோஜோன் மால் கீழ் தளம், சிவானந்தபுரம், சரவணம்பட்டி, கோயம்புத்தூர், தமிழ்நாடு 641035 என்ற இடத்தில் அமைந்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img