fbpx
Homeபிற செய்திகள்புதிய நியாய விலைக்கடை: எம்எல்ஏ திறப்பு

புதிய நியாய விலைக்கடை: எம்எல்ஏ திறப்பு

சூலூர் தொகுதிக்குட்பட்ட முத்து கவுண் டன் புதூர் ஊராட்சி முதலிபாளையம் பகுதியில் புதிய கஸ்தூரிபாய் மகளிர் புதிய நியாய விலை கடையை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கந்தசாமி தொடங்கி வைத்தார்.

முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி தலைவர் வி.பி.கந்தவேல் முயற்சியில் இலவச ஆம்புலன்ஸ் சேவை, மற்றும் மிக குறைந்த விலையில் காய்கறி சந்தை, கஸ்தூரிபாய் மகளிர் புதிய நியாய விலை கடை, பேருந்து நிழற்குடை, மின்விளக்கு போன்றவற்றை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நிகழ்வில் மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி தோப்பு அசோகன், சூலூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாதப்பூர் பாலு, அனைத் துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் தோப்பு கா. அசோகன், கருமத்தம்பட்டி நகர கழக செயலாளர் ஆதவன் பிரகாஷ், வடக்கு ஒன்றிய அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரபு, வடக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் பூக்கடை சீனிவாசன் லோகநாதன், துரை மற்றும் கழக உடன்பிறப்புகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img