fbpx
Homeபிற செய்திகள்‘பாரம்பரிய இட்லி திருவிழா’ கோவையில் மாணவர்கள் அசத்தல்

‘பாரம்பரிய இட்லி திருவிழா’ கோவையில் மாணவர்கள் அசத்தல்

கோவை நவ இந்தியா வில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை சார்பில், உலக இட்லி தினத்தையொட்டி, நேற்று (மார்ச் 30) ‘பாரம்பரிய இட்லி திருவிழா’ நடை பெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக் குமார் தலைமை வகித்தார். அமெரிக்க நாட்டில் உள்ள லீமிங்டன் ஸ்பா நட்சத்திர விடுதியின் சமையல் கலை நிபுணர் உமா சங்கர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை மாணவர்கள் 100 விதமான இட்லிகள் மற்றும் அதற் கேற்ப சுவையான 20 விதமான சட்னி, சாம் பார் தயார் செய்து அசத் தினர்.

பாரம்பரிய கம்பு இட்லி, தயிர் இட்லி, ரொட்டி இட்லி, ஆப்பிள் இட்லி, மல்லி இட்லி, பள்ளிபாளையம் இட்லி, பருப்பு இட்லி, சிக்கன் இட்லி, முட்டை இட்லி, காளான் இட்லி, கேரட் இட்லி, தேங்காய் இட்லி, அடை இட்லி, வாழை இட்லி, கொத்து இட்லி, கொள்ளு இட்லி, தம்ளர் இட்லி, இட்லி பஜ்ஜி, குல்ஃபி இட்லி, கருப்பட்டி இட்லி, ரவை இட்லி, காய்கறி இட்லி என விதவிதமான இட்லிகளைத் தயார் செய்தனர்.

தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, கேரட் சட்னி, வெங்காய சட்னி, பூண்டு சட்னி, பிரண்டை சட்னி, பீட்ரூட் சட்னி, மிளகாய் சட்னி, பேரீட்சை சட்னி, தயிர் சட்னி, மாங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் உள்ளிட்ட சட்னி, சாம்பார் வகைகளைத் தயாரித்தனர்.

இதற்கான ஏற்பாடு களை உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத்தலைவர் முனைவர் எஸ்.தீனா மற்றும் துறைப் பேராசிரியர்கள் செய்தி ருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img