கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழுக்கூட்டம் பஞ்சாயத்து தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. பள்ளியின் முன்புறம் 25 ஆண்டுகளுக்கு மேலாகி இடியும் நிலையில் உள்ள கட்டிடத்தை இடிக்க பி.டி.ஓ., அலுவலகத்திற்கு கடிதம் மூலம் கோரிக்கை வைப்பது.
பள்ளிக்கு வண்ணம் அடிக்க ஒதுக்கீட்டு செலவுக்கு மேல் தன்னுடைய நிதியை கொடுத்த சரவணன் என்பவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலதண்டாயுதம், வரும் செப்டம்பர் 1ந் தேதி முதல் பள்ளி திறக்க இருப்பதால், பெற்றோர்கள் மாணவர்களுக்கு முகவசம் கொடுத்து அனுப்ப வேண்டும். சமுக இடைவெளியுடன் இருக்க, பெற்றோர் குழந்தைகளுக்கு அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார்.
வட்டாரக்கல்வி அலுவலர் மரியரோஸ் பேசுகையில், கல்வி டிவியை குறித்த நேரத்தில் மாணவர்கள் பார்க்கும் வகையில் பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் என்றும், பள்ளி வாட்ஸ்ஆப் குழுவில் கொடுக்கப்படும் பாடங்களை மொபைல் கொடுத்து பெற்றோர் உடன் இருந்து அவர்கள் கற்க துணைபுரியவேண்டும் என்றார்.
முடிவில் ஆசிரியர் செந்தில்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சரவணன், பலராமன் மற்றும் அழகுராணி, மேலாண் மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



