Homeபிற செய்திகள்பள்ளி ஆசிரியர்கள்- பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்க மகாசபை கூட்டம்

பள்ளி ஆசிரியர்கள்- பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்க மகாசபை கூட்டம்

தர்மபுரி ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் 2021 -2022 ஆண்டு மகாசபை கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்க தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்று பேசினார்.

இயக்குனர்கள் விஜயலட்சுமி, மணிமேகலை, ரேவதி, ராம்குமார், மஞ்சுளா, சிவகுமார், ஏழுமலை, முனியப்பன், ரத்தினம் உள்பட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 297 சங்க உறுப்பினர்களுக்கு ரூ.36 லட்சத்து 68 ஆயிரத்து 277 லாப பங்கு ஈவுத்தொகை வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img