fbpx
Homeபிற செய்திகள்பரம்பிக்குளம் அணை மதகு சீரமைக்கும் பணி ரூ.7.20 கோடி செலவில் துவக்கம்

பரம்பிக்குளம் அணை மதகு சீரமைக்கும் பணி ரூ.7.20 கோடி செலவில் துவக்கம்

பரம்பிக்குளம் அணை மதகு சீர் அமைக்கும் பணி ரூ 7 கோடியே 20 லட்சம் செலவில் துவங்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி அருகே பரம்பிக்குளம் அணையில் உள்ள மூன்று மதகுகளில் நடுவில் இருந்த மதகு கடந்த மாதம் 20ம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டு கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக தேக்கிவைக்கப்பட்ட 6 டிஎம்சி தண்ணீர் கேரளா பாரத புழாவிற்கு சென்றது.

நீர் பாசன துறை அமைச்சர் துரை முருகன் ஆய்வு மேற்கொண்டு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார், அமைச்சர் முன்னிலையில் துறை சார்ந்த அதிகாரிகள் மத்தியில் ஆலோசனை நடத்தப்பட்டு தமிழக அரசால் ரூ.7 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்டது.

மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு திருச்சியில் அணைக்கு மதகு தயாரிக்கும் பணியும். அணையில் மதகு பொருத்தப்படும் இடத்தில் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

அணையின் நடுப்பகுதி சங்கிலி இணைக் கும் பீம், 37 டன்னும் மதகு 40 டன்னும் கொண்டது எனவும், தமிழகம் மற்றும் கேரளா பொதுபணித்துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றி வருவதாகவும், மேலும் 30 நாட்களுக்குள் பணிகள் முழுமையாக முடிந்துவிடும் என்றும் கோவை, திருப்பூர் மற்றும் கேரளா விவாசாயிகளுக்கு முறையாக விவசாய பாசனத்திற்கு உரிய நேரத்தில் வழங்கப்படும் எனவும் உதவி செயற் பொறியாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img