கோவையைச் சேர்ந்த வர்த்தக மெகோவைன் பொருள் மற்றும் பி2பி சாஸ் சேவை நிறுவனமான கோவை. கோ பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வரும் கோவை.கோ கனெக்ட் திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்ய இருக்கிறது.
குறிப்பாக கிராமப் பகுதிகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம் 2011ல் தனது முதல் சேவையான, (BizTalk360) பிஸ்டாக் 360-ஐ அறிமுகம் செய்தது.
இந்த சேவை மைக்ரோசாப்டின் பிஸ்டாக் (BizTalk) சர்வருக்கான கண்காணிப்பு மற்றும் அனலிட்டிக்ஸ் சேவையை வழங்குகிறது.
இதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, சரவண குமார், மைக்ரோ சாப்ட் நிறுவனத்திடம் இருந்து ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க நபர் (எம்.வி.பி.) விருது பெற்றுள்ளார்.
நிறுவனம், சர்வர்லெஸ் 360 (Serverless 360) மற்றும் டாகுமெண்ட் (Document 360) உள்ளிட்ட சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
கோவை.கோ மற்றும் எதிர்கால திட்டங்களைப் பற்றி அதன் நிறுவனர் மற்றும் தலைமை அதிகாரி சரவணகுமார் கூறியதாவது:
“இலாபகரமான சாஸ் ஸ்டார்ட் அப்” பத்தாவது ஆண்டை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம். எங்களது 1500-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவன வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் திறமை மற்றும் புதுமையான சேவையை உருவாக்கும் ஆற்றல் அகியவற்றை இது பிரதிபலிக்கிறது.
அடுத்த சில ஆண்டுகளில் விரிவாக் கத்திற்காக முதலீடு, ஆய்வு முதலீடு, வர்த்தக முதலீடு செய்யப்படும். எங்கள் கோவை.கோ கனெக்ட் திட்டம், மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தொழில் துறையின் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பெருந்தொற்று காலத்திலும் இந்நிறுவனம், கோவையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இணையம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு வழங்குவதோடு, உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வருபவர்களின் திறமையை வெளிக் கொண்டு வர மற்றும் 2030ல் சாஸ் யூனிகார்ன் அந்தஸ்து பெறுவதிலும் நிறு வனம் கவனம் செலுத்துகிறது என்றார்.



