சின்னத்தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பட்டா சிறப்பு திருத்த முகாம் நடந்தது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கோவை வடக்கு தாலுகா சார்பில் நஞ்சுண் டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கார்த்திகேஸ்வரி தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.
மண்டல வட்டாட்சியர் சரவண குமார் தலைமையில் துடியலூர் வட்டாரத்திலுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் இதில் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து நில அளவை மற்றும் உட்பிரிவு எண் திருத்தம், பட்டாவில் பெயர், உறவினர் பெயர் திருத்தம், கணினி சிட்டாவில் காலியாக விடுபட்ட விபரங்களை பதிவு செய்தல், இருபட்டாதாரர் களுக்கிடையிலான மாறுபாடு பட்டாவில் உறவு முறையில் திருத்தம்,முதியோர் ஓய்வூதியம் ஆகியவை குறித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.
முகாமில் ஊராட்சி மன்றத்தின் முன்னாள் தலைவர் வி.கே.வி.சுந்தரராஜன்,துணைத் தலைவர் திருநாவுக்கரசு,வருவாய் ஆய்வாளர் ஆகாஷ்குமார்,நஞ்சுண்டாபுரம் கிராம நிர்வாக அலுவலர் காட்டுதுரை, ஊராட்சி மன்ற உறுப்பினர் நாகராஜ்,விவசாய சங்கப் பிரதிநிதிகள், ஊராட்சி மன்ற செயலர் ஈஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.



