fbpx
Homeபிற செய்திகள்படிப்புக்காக உதவி கேட்ட மதுரை மாணவியை கார் அனுப்பி நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர்

படிப்புக்காக உதவி கேட்ட மதுரை மாணவியை கார் அனுப்பி நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர்

கல்லூரியில் படிக்க உதவி கேட்ட மதுரை மாணவியை காரை அனுப்பி நேரில் வரவ ழைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மாணவர்களின் கல்வி சிறக்க பல்வேறு திட் டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக, படிக்க வசதி இல்லாமல் அரசின் உதவியை எதிர்பார்க்கும் மாண வர்களுக்கு கட்டணமின்றி கல்லூரிகளில் படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

அந்த வகையில், மதுரை மாவட்டம் திருவேடகம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஷோபனா கல்லூரியில் சேர்ந்து படிக்க பண வசதி இல்லை என கடிதத்தின் வாயிலாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு தெரியப் படுத்தினார்.

உடனடியாக அந்த கடிதத்தை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பு படிக்க ஏற்பாடு செய்தார்.

முதல்வர் செய்த உதவிக்காக நேரில் வந்து கூட நன்றி தெரிவிக்க முடியாத நிலையில் இருந்த ஷோபனா, சென்னை வருவதற்கு தனக்கு பண வசதி இல்லை என கடி தத்தின் மூலமாக தனது நன்றியை தெரிவித்தார்.

இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் மாணவி ஷோபனாவை சந்திக்க விரும்பினார்.

அதற்காக ஷோபனாவின் இல்லத்திற்கே காரை அனுப்பி மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்தார். பின்னர், மாணவி ஷோபனா முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

மாணவி ஷோப னாவுக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அவருக்கு தேவையான புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவியை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img