ராமநாதபுரம் வெளிப்பட்டினத்தில் உள்ள பசரி நினைவு பொதுநல அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை, ரத்ததானம், இலவச மருத்துவ முகாம், கொரோனா காலத்தில் இறந்தவர்களை அவரவர்கள் சமுதாயப்படி நல்லடக்கம் செய்தல், பண்டிகை காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு புத்தாடைகள், அரிசி, மளிகை பொருட்கள் வழங்கல் போன்ற பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் கொலபசி நண்பர்கள் மூலமாக ஏழை எளிய குடும்பங்களுக்கு தேவையான ரூ.1600 மதிப்பிலான இருபத்தி ஆறு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை 150 குடும்பங்களுக்கு வழங்கினர்.
ரூ.2 லட்சத்து 38 ஆயிரத்து 650 மதிப்பில் பசரி நினைவு பொதுநல அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தினமும் 600 நோன்பாளிகளுக்கு சஹர் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவையை தொடர்ந்து 6 ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.
இச்சேவை செய்வதற்கு உதவி செய்த அனைவருக்கும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் கொலப்பசி நண்பர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.



