நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள தமிழக அரசினர் விருந்தினர் மாளிகை வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனத்தை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் சர்மிளா பெய்லின், உதவி செயற்பொறியாளர்கள் ஜீவா சங்கர், பீமாராஜ் ஆகியோர் உள்ளனர்.



